தனி யூனியன் பிரதேசம் லடாக் மக்கள் மகிழ்ச்சி

by எஸ். எம். கணபதி, Aug 6, 2019, 11:49 AM IST

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவு ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது.

இதைத் தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்குவதற்கான தீர்மானமும், மறுசீரமைப்பு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்படுகிறது.

இதற்கிடையே, லடாக் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக மாற்றுவதை அப்பகுதி மக்கள் வரவேற்று கொண்டாடுகிறார்கள். அங்கு செல்வாக்கு மிக்க லடாக் புத்தபிட்சுகள் சங்கம், மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் பி.டி.குன்ஷாங் கூறுகையில், ‘‘கடந்த 1949ம் ஆண்டு முதல் நாங்கள் எழுப்பி வந்த கோரிக்கை 70 ஆண்டுகளுக்குப் பின்பு நிறைவேறியுள்ளது.

தனி யூனியன் பிரதேசம் கேட்கும் நீண்ட கால போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது’’ என்றார். இதற்கு முந்தைய அரசுகள் வாக்குறுதி அளித்தாலும் நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் துணிச்சலாக நடவடிக்கை எடு்த்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதே போல், லடாக்கைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் தனி யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ;மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக அமோக ஆதரவு


Leave a reply