காஷ்மீரில் முழு அமைதி அஜித்தோவல் நேரில் ஆய்வு

Advertisement

காஷ்மீரில் முழு அமைதி நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை அஜித்தோவல் சந்தித்து பேசினார். பின்னர், நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரிவு 370ஐ ரத்து செய்தால் கடும் விளைவுகள் நேரிடும் என்று அந்த மாநில அரசியல் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் கூறி வந்தனர். இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருந்தது.

ஜம்மு, காஷ்மீரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. மேலும், அமர்நாத் யாத்திரையை நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் காஷ்மீரை விட்டு வெளியேறச் செய்தனர். அதன்பின், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோரை வீட்டுச் சிறையில் வைத்தனர். தொலைபேசி, செல்போன் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன.

தற்போது, ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறவில்லை. ஸ்ரீநகர் உள்பட முக்கிய நகரங்களில் 144 தடையுத்தரவு நீடித்து வருகிறது. மாநிலத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வெளியே நடமாடுவதை முழுமையாக குறைத்து விட்டனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் வரை மிகவும் ரகசியம் காக்கப்பட்டது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு மட்டுமே இந்த விவகாரம் தெரியும்.

இந்நிலையில், காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறி்த்து ஆய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சென்றிருக்கிறார். இன்று அவர் சோபியான் பகுதியில் உள்ளூர் மக்களுடன் உரையாடினார். பின்னர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை சந்தித்து பேசினார். தொடர்ந்து, ராணுவ வீரர்களையும் சந்தித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>