தெலங்கானாவில் தாமரை மலருமா? தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

தெலங்கானாவில் தாமரை மலருமா என்ற கேள்விக்கு தமிழிசை என்ன பதில் சொல்லியிருப்பார்?

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்திராஜன், உண்மையிலேயே தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அடிவயிற்றில் இருந்து ஓங்கி ஒலித்த குரல், வைரலாக பரவியது மட்டுமல்ல. அதை வைத்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் கூட வந்தன. ஆனால், எதையும் ஸ்போர்ட்டிவ்வா எடுத்து கொள்ளும் தமிழிசை, அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் பணியாற்றினார். தூத்துக்குடியில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும், துணிவுடன் களம் கண்டவர். இதற்கு பிரதிபலனாக தற்போது அவருக்கு தெலங்கானா கவர்னர் பதவியை பிரதமர் மோடி அரசு அளித்துள்ளது.

இந்நிலையில், அவர் இந்து பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற குரல் கொடுத்தீர்கள், இப்போது தெலங்கானாவில் தாமரை மலருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலர்ந்தே தீரும். தெலங்கானாவில் ஏற்கனவே பாஜக வளரத் தொடங்கி விட்டது. நான் இப்போது கவர்னராகி விட்டதால் அரசியல் பேசக் கூடாது. நான் இந்த பதவியைக் கொண்டு தெலங்கானா மக்களுக்கான நலத் திட்டங்களில் சிறந்த பணியாற்ற முடியும். நான் எந்த உயர்ந்த பதவியை எட்டினாலும் எளிமையையும், அணுகுமுறையையும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நான் ஒரு திருமண விழாவுக்கு புறப்பட்டு கொண்டிருந்தேன். அப்போது கட்சித் தலைவர் என்னை தொடர்பு கொண்டு, எனது முழுப்பெயர் மற்றும் இதர விவரங்களை கேட்டார். அப்போதே எனக்கு ஒரு பதவி தரப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவர் என்னிடம் பேசும்போதுதான் கவர்னர் பதவி தரப்படுவதை அறிந்தேன். இந்தப் பதவியை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது தந்தை காங்கிரஸ் தலைவராக இருந்தவர். அவரது மகளான நான் பாஜகவில் சேர்ந்ததால், எனது உறவினர்கள் பலரும் என்னிடம் பேசுவதே இல்லை.

அவர்கள் கூட இன்று எனக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். நான் ஓரிரு நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மாநிலம் முழுவதும் சுற்றி பணியாற்றினேன். எனது பணியை மெச்சும் வகையில் இந்தப் பதவி தரப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

More Politics News
admk-foundation-day-celebrations
அதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..
we-will-not-join-with-traitors-in-admk-says-ttv-dinakaran
துரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி
seeman-sould-be-arrested-says-minister-rajendra-balaji
சீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
mk-stalin-says-admk-government-got-isi-in-corruption
ஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..
edappadi-critisize-mkstalin-in-by-election-campaign
தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..
edappadi-palanisamy-appealed-the-tamilnadu-people-to-give-warm-reception-to-modi-xinping
மோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்
admk-ministers-becomes-bjps-mouth-piece
பாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா? எஸ்.டி.பி.ஐ. பாகவி கவலை..
dmk-welcomes-china-president-xi-jinpings-visit
சீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி
felicitations-to-telangana-governor-tamilisai-soundararajan-in-chennai
எவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு
ponmudi-reacts-to-minister-cvshunmugam-comments
விஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? பொன்முடி ஆவேசம்
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
vijays-bigil-release-date-is-finally-here
தளபதி விஜய் -கார்த்தி 25ம்தேதி மோதல்.. தீபாவளிக்கு வசூலை குவிக்கப்போவது பிகிலா. கைதியா...
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
samantha-wrapped-shoot-for-96-movie-official-telugu-remake
திரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..
sye-raa-narasimha-reddy-collection-hindi-version
சிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது
what-if-karti-chidambarams-jibe-over-bcci-post-for-amit-shahs-son
அமித்ஷா மகன் செய்தால் சரியா? இதே நான் ஆகியிருந்தால்.. கார்த்தி சிதம்பரம் கிண்டல்..
warrant-against-ameesha-patel-in-cheque-bounce-case
விஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு.. 3 கோடி செக் மோசடி வழக்கு..
Tag Clouds