பாலஸ்தீனில் ஹமாஸ் ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் விமானப்படைத் தாக்குதல்

by Ari, Apr 17, 2021, 06:18 AM IST

ஹமாஸ் படை இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது.

தனக்கென நாடு இல்லாமல் உலக முழுவதும் ஆங்காங்கே இருந்த யூதர்கள், தங்ளுக்கென தனி நாடை உருவாக்கினர். பாலஸ்தீனத்தின் நிலத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாகியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், பாலஸ்தீனத்திற்கும் - இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் ஸ்ரெடோ நகரின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து கடந்த 15 ஆம் தேதி காசா முனையில் இருந்து ஹமாஸ் படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் ஸ்ரேடோ நகரின் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்தது.

ஸ்ரெடோ நகர் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா முனையில் உள்ள ஹமாஸ் படையின் ராணுவ நிலைகள், ஆயுத உற்பத்தி மையங்கள், ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஹமாஸ் படையின் ஆயுத உற்பத்தி இடங்கள், ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் கிடங்குகள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading பாலஸ்தீனில் ஹமாஸ் ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் விமானப்படைத் தாக்குதல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை