ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்புக்கு தோல்வியே கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன், பாஜக சார்பில் நடிகை குஷ்பு, மக்கள் நீதி மன்றம் சார்பில் கே.எம்.சரீப், நாம்தமிழர் கட்சி சார்பில் அ.ஜெ,ஷெரீன், அமமுக சார்பில் என்.வைத்தியநாதன் மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த 2016 ஆம் தேர்தலில் 57.02 சதவீதம் வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. 2016 இல், திமுக வேட்பாளர் கு.க செல்வம், அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி அவர்களை 8829 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். இந்த தொகுதி சென்னை சென்ட்ரல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது, 2019 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக-தான் இங்கே வெற்றிபெற்றது.
இந்நிலையில், பிரபல தமிழ் தொலைக்காட்சி தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவிற்கு தோல்வியே கிடைக்கும் என்றும், அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் எழிலன் வெற்றி பெறுவார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆயிரம்விளக்கு தொகுதி திமுகவின் கோட்டையாக சொல்லப்பட்டாலும் மருத்துவர். எழிலனுக்கும் அத்தொகுதியில் நற்பெயர் உள்ளதாக கூறப்படுகிறது.