கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து வரும் முடிவுகள் ஆளும் இடது ஜனநாயக முன்னணி தொடர்ச்சியாக வரலாற்று ரீதியான இரண்டாவது வெற்றியை வெற்றிபெறக்கூடும் என்பதை உணர்த்துகின்றன.
தற்போதைய நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி 92 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 45 இடங்களிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன. அதேபோல் எதிர்பாராத திருப்பமாக பாஜக மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும் தான் பாஜக வென்றிருந்தது.
ஆனால், இந்த முறை திரிச்சூரில் மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி, நேமமில் கும்மனம் ராஜசேகரன் மற்றும் பாலக்காட்டில் மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் என மூன்று தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது பாஜக. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எனினும், மஞ்சேஸ்வரம் மற்றும் கொன்னி என்ற இரண்டு இடங்களில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் இரு இடங்களிலும் பின் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.