தனிப்பெரும் தலைவராக எடப்பாடிக்கு வெற்றி... ஸ்டாலினுக்கு?!

by Sasitharan, May 2, 2021, 15:06 PM IST

எடப்பாடி பழனிச்சாமி தன் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். தற்போதைய தேர்தல் முடிவு நிலவரங்கள் அதைத்தான் காட்டுகின்றன.

வெளியாகியுள்ள முடிவுகளின்படி, அதிமுக, திமுக-வைவிட சில தொகுதிகள பின் தங்கியுள்ளது. இன்னும் சில தொகுதிகளில் கூடுதலாக பின்தங்கலாம். ஆனாலும்கூட, இதை எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுக-விற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. இனி அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கும் என்பதும் உறுதிப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் சாதுர்யத்தையும், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும், மக்களிடம் அதிமுக செலுத்தும் செல்வாக்கையும் இந்தத் தேர்தல் அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது. திமுக இப்போதுவரை முன்னிலையில் இருந்தாலும், இன்னும் சில தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சி அமைத்தாலும், அதை ஸ்டாலினின் அரசியல் வெற்றியாக நான் மதிப்பிடப்போவதில்லை. சொல்லப்போனால், இந்தத் தேர்தலிலும் திமுக படுதோல்வி அடைந்துள்ளது (முன்னிலையில் இருந்தாலும்) என்றே கருத தோன்றுகிறது.

You'r reading தனிப்பெரும் தலைவராக எடப்பாடிக்கு வெற்றி... ஸ்டாலினுக்கு?! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை