பாஜக-வை எச்சரிக்கிறேன்..!- மெகபூபா முஃப்தி ஆவேசம்

Jul 13, 2018, 16:08 PM IST

ஜம்மு காஷ்மீர் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையிலும் எங்களது பிடிபி கட்சியினுடைய கூட்டணியை சிதைக்கும் வகையிலும் மத்தியில் ஆளும் பாஜக செயல்பட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜக - பிடிபி இடையில் நிலவி வந்த கூட்டணி உறவு முறிந்தது. ‘ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புக் காரணங்களுக்கு மாநில அரசு சரி வர ஒத்துழைப்புத் தர மறுத்து வருகிறது. இனியும் எங்களால் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது’ என்று கூறி பாஜக, மெஹுபூபாவின் கட்சியுடனான கூட்டணியை முறித்தது.

இதையடுத்து, மெஹுபூபா முப்டி அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது. பாஜக, பிடிபி-யுடன் கூட்டணியை முறித்துக் கொண்டாலும், அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கொதிப்படைந்துள்ளார் மெஹுபூபா.

‘எங்களின் கட்சியை பாஜக உடைக்க நினைத்தால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன். 1987 ஆம் ஆண்டைப் போல, காஷ்மீரிகளின் வாக்குரிமையை மத்திய அரசு பறித்தால், சலாவுதீன், யாசின் மாலிக் போன்ற கிளர்ச்சியாளர்கள் உருவாவர்கள்’ என்று பாஜக-வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பாஜக தரப்பு, ‘நாங்கள் பிடிபி-யின் எந்தத் தலைவர்களுடனும் பேசவில்லை. எங்கள் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தக் கூடாது’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

 

You'r reading பாஜக-வை எச்சரிக்கிறேன்..!- மெகபூபா முஃப்தி ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை