பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த புதிய யுக்தி: அரியானா அரசு

Jul 13, 2018, 15:35 PM IST

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்வங்களில் ஈடுபடுவோரின் வாகன லைசென்ஸ் ரத்து, பென்சன் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரயானா முதல்வர் அறிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக அரியானா அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம்ற நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.

நீதிமன்றத்தில் வழக்கு மீதான தீர்ப்பு வரும் வரையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும். வழக்கின் முடிவில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் எந்த காலத்திலும் இழந்த சலுகைகளை அவர்களால் பெற முடியாது. இத்திட்டம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அல்லது ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் தடையின்றியும், விரைவாகவும் விசாரணை நடத்தி முடிக்கப்படும். நிலுவையில் உள்ள வழக்குகளும் விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த புதிய யுக்தி: அரியானா அரசு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை