ஜெயக்குமார் ஆடியோ என்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கும் போன் உரையாடல் விவகாரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது ஜெயக்குமாரின் மகனும் எம்.பியுமான ஜெயவர்தன் கோபத்தில் உள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சன் நியுஸ் தொலைக்காட்சிக்கு வெற்றிவேல் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியின் போது தான் அதிமுக எம்.பி ஒருவருக்கு தம்பி பாப்பா பிறந்திருப்பதாக வெற்றிவேல் கூறியிருந்தார். அன்று முதலே எந்த எம்.பிக்கு தம்பி பாப்பா பிறந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்றது.
ஆனால் பேட்டியின் போதே தம்பி பாப்பா பிறந்துள்ளது ஜெயவர்தனின் அப்பா ஜெயக்குமாருக்கு தான் என்று சில ஹின்டுகளையும் வெற்றிவேல் கொடுத்திருந்தார். அன்று முதலே இப்போது வெளியிடப்போகிறோம், நாளை வெளியிடப்போகிறோம் என்று ஆடியோவை வைத்துக் கொண்டு தினகரன் தரப்பு பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயக்குமார் தனது வேலைகளில் தீவிரம் காட்டி வந்தார்.
இந்த நிலையில் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆடியோவை வெற்றிவேல் தரப்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டது. ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு ஊடகங்கள் அது குறித்து செய்தி வெளியிடும் என்று வெற்றிவேல் தரப்பு எண்ணியது. ஆனால் ஜெயா டிவி தவிர வேறு எந்த தொலைக்காட்சியும் ஆடியோவை கண்டுகொள்ளவில்லை. கலைஞர் தொலைக்காட்சியில் கூட ஜெயக்குமார் பெயருடன் கூடிய பர்த் செர்டிபிகேட் செய்தியை மட்டுமே ஒளிபரப்பியது.
இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுத்தார் அமைச்சர் ஜெயக்குமார்:
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "அந்த ஆடியோவில் இடம்பெற்ற வாய்ஸ் என்னுடையது அல்ல யாரோ அது போன்று மார்ப்பிங் செய்து பேசி உள்ளனர். இதற்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எனக்கு தெரியும், திராணி இருந்தால் நேரடியாக மோத வேண்டுமே தவிர, இது போன்று செய்ய கூடாது. இதில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாக சட்டத்திற்கு முன் பதில் சொல்லி ஆக வேண்டும்,அந்த இடத்தில் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளலாம் என மிகவும் கூலாக பேசி இடத்தை காலி செய்தார்.
இந்த விவகாரத்தில் தனது தந்தையின் பெயரை டேமேஜ் செய்வதாக கூறிக் கொண்டு விவகாரத்தில் தனக்கு தம்பி பாப்பா பிறந்துள்ளதாக வெற்றிவேல் மீண்டும் மீண்டும் கூறி வருவது ஜெயவர்த்தனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண் ஒருவரை பயன்படுத்தி அரசியல் விளையாட்டை ஆடி வரும் வெற்றிவேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ஜெயவர்தன் துடித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.