1990 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சியோல் விருது பெறப்போகும் 14ஆம் நபர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
2018ம் ஆண்டுக்கான தென் கொரியாவின் உயரிய விருதான
சியோல் அமைதி விருதுக்கு பிரதமர் மோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவது, உலக பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய மக்களிடையே மனிதவள பண்பை அதிகரிக்க செயல்படுவது போன்றவற்றை பாராட்டி, மோடிக்கு இந்த பரிசை வழங்க சியோல் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சியோல் பரிசுக் குழு பிரதமர் மோடியை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடுபவர் என்று அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உள்நாட்டு அமைதி மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கைகளை உருவாக்கி சர்வதேச அமைதிக்காக பணியாற்றியதற்கும் மோடிக்கு அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக கூறியுள்ளது.
இந்த விருதை மனதார ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விருதின் மூலம் தென் கோரியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நட்பு மேலும் வலுவாகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான விருதை மோடி பெற்றிருப்பதால் பல நாட்டின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, மோடி இந்த விருது பெறுவதால் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருது ஐ.நா சமிபத்தில் வழங்கியது குறிப்பிடதக்கது.