கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 82. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்தார் இவர், தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக ஆக்கியவர். இவர் 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார்.
இவரது 'கூத்துப்பட்டறை' என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் பயிற்சி பெற்றார்கள். முத்துசாமி மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். முத்துசாமி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.