சபரிமலை ஐயப்பன் கோவில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல, நம்பிக்கை கொண்ட அனைவரையும் வரவேற்கும் பாரம்பரியம் கொண்டது என்று கேரளா உயா்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தொிவித்துள்ளது.
பாஜக வைச் சோ்ந்த பி.ஜி.மோகன் கேரளா உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில் அடுத்த மாதம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கிவிடும். அப்போது பக்தா்களை தவிா்த்து வேறு யாரும் கோவிலுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்ற தீா்பபை தொடா்ந்து இந்துக்கள் அல்லாதவா்கள், வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவா்கள் கோவிலுக்குள் வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தாா்.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த இருப்பதால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று 4 பெண்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் கேரளா உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் கோவில் என்பது இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல. கோவிலின் பாரம்பாியங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்குமானது. அதே போன்று, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் அனைவருமே இருமுடி அணிந்து செல்ல வேண்டியது கிடையாது. ஆனால், இருமுடி கட்டி செல்பவா்கள் மட்டுமே 18 படிகளை கடக்க முடியும். இந்த விவகாரத்தில் கேரளா அரசும், திருவிதாங்கூா் தேவஸ்தானமும் இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். இதே போன்று 4 பெண்கள் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில், பக்தா்களாக இருந்தால், அவா்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை குறித்து பேசிய ஹெச்.ராஜா அனைத்து மசூதிகளிலும் அகமதியா முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு கூற முடியுமா என கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா வெறுமனே இரண்டு வரி புத்தகத்தை படித்து விட்டால் போதுமா என நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.