இலங்கை அரசியல் கலவரமும் அர்ஜுன ரணதுங்காவின் கைதும்!

Sri Lankan political riots and Arjuna Ranatungas arrest

by Manjula, Oct 30, 2018, 11:29 AM IST

இலங்கை அரசியல் மாற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அர்ஜுன ரணதுங்கவை, 5 லட்சம் ரூபாய் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்திற்குள்  நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார்.


இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். இச்சம்பவத் தொடர்பில் அர்ஜுன ரணதுங்காவை கைது செய்யுமாறு வலியுறுத்தி பெற்றோலிய அமைச்சகத்திற்குள் ஒரு சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்காவை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெட்ரோலிய அமைச்சகத்திற்குள்  அர்ஜுன ரணதுங்கா சென்றிருந்த போது அங்கு அமைதியற்ற சூழ்நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து அர்ஜுன ரணதுங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளால் துப்பாக்கிச்சூட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார்.


இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் ரணதுங்கா தெரிவிக்கையில்
“ தனது அமைச்சரவை தொடர்பாக விஷயத்தில் சம்பவம் நடைப்பெற்ற இடத்திற்கு சென்றிருந்து போது கட்டைகளுடன் வந்த மர்ம நபர்கள் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும், அவர்களை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடன் பாதுகாப்பு ஆள்கள் இருக்கவில்லையென்றால் தன்னைக் கொன்றிருப்பர் என்றும்  முதன்முறையாக மரண பயத்தைக் காட்டிவிட்டனர்” என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் "ராஜபக்ஷ தரப்பினருக்கு ஆதரவு வழங்குமாறு எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதனால் இவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். ஆட்சியையும், அதிகாரத்தையும் பலவந்தமாக பிடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது''. என தெரிவித்திருந்தார்.

''என்னை விலை கொடுத்து வாங்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் சலுகைகளையும், பதவிகளையும் தருவதாகக் கூறினார்கள். ஆனால் நான் நேர்மையாக செயற்படுபவன். அதனால் நான் ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பதற்குத் தீர்மானித்தேன்." என்றும் அவர் தெரிவித்திருந்தார்
 ரணதுங்காவின் கைதை அடுத்து மகிந்த தரப்பு தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் திடீர் அரசியல் மாற்றத்திற்கான காரணம் குறித்து சிறிசேனாவின் விளக்கம் இலங்கை அரசியலில் மேலும் புயலை கிளப்பியுள்ளது.


"தன்னை கொலை செய்ய நடந்த திட்டம் காரணமாகவே ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதாக சிறிசேனா அறிவித்துள்ளார். ரணிலின் அமைச்சரவையில் உள்ள முக்கியமான அமைச்சர் ஒருவர்தான் இந்த கொலையை திட்டமிட்டார். அதனால் நடவடிக்கை எடுத்தேன் என்றுள்ளார்.

மேலும், இந்த கொலை திட்டம் குறித்து ரணிலுக்கு எல்லா விவரங்களும் தெரியும். அந்த அமைச்சர் யார் என்று ரணிலுக்கு அப்போதே தெரியும். அந்த அமைச்சர் குறித்து இப்போது சொல்ல முடியாது. விரைவில் அதுபற்றி அறிவிப்பு வெளியாகும். என்று தெரிவித்துள்ளார்.

You'r reading இலங்கை அரசியல் கலவரமும் அர்ஜுன ரணதுங்காவின் கைதும்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை