விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டி காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் 2000 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டை முதலமைச்சர் எடப்பாடி இன்று காலை துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டைக் காணவும் ஏராளமானோர் திரண்டனர். ஜல்லிக்கட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்றதால் வேக வேகமாக அவிழ்த்து விடப்பட்டன.
இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் தாறுமாறாக ஓடி பார்வையாளர்களையும் முட்டித் தள்ளியது. இதில் சதீஷ்குமார், ராமு இருவரும் உயிரிழந்தனர். மாடுபிடி வீரர்கள் 50 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக விராலிமலை ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு நடத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.