தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ரொம்ப ஓவராகவே சப்போர்ட் செய்கிறது என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார்.
குக்கர் சின்னத்தை தினகரனின் அமமுக ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் காட்டமாக விமர்சித்துள்ளார். எங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அனுமதி வாங்கினோம். ஆனால் அதிமுக தரப்பில் குக்கர் சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் சென்றனர்.
அதற்கு இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் காரணம் சொன்னது அதிமுக. திருவாரூர் இடைத் தேர்தலுக்காக குக்கர் சின்னம் ஒதுக்குமாறு இப்போது மீண்டும் கேட்டோம். உடனே கட்சியை பதிவு செய்யவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை என்ற சாக்கு போக்கு கூறி குக்கர் சின்னத்திற்கு அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு என்று ஒரு எல்லை உள்ளது. ஆனால் அதையெல்லாம் மீறி ரொம்ப ஓவராகவே பாஜகவுக்கு விசுவாசமாக உள்ளது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் தங்க தமிழ்ச் செல்வன்.