அரசியலுக்கு தாமதமாக வந்தது வருத்தமளிக்கிறது என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.அரசியலில் குதித்து மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் கமலஹாசன் விறுவிறுவென தேர்தலுக்கும் தயாராகி வருகிறார். இன்று சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிய கமல், இளமைப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம் கொள்ள வேண்டும். நான் ரொம்ப லேட்டாக அரசியலுக்கு வந்தது வருத்தமாக உள்ளது .
இப்போதும் நல்லவர்கள் அரசியலில் இருந்திருந்தால் நானும் வந்திருக்கவே மாட்டேன். தற்போதைய சூழல் நானும் லேட்டாக அரசியலுக்கு வர வேண்டியதாகிவிட்டது என்று கமல் தெரிவித்தார்.