புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார்.
அச்சல் குமார் ஜோதி, கடந்த ஜூலை 6-ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவரது பதவிக்காலம் ஜனவரி 22-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதையொட்டி, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையருக்கான போட்டியில், ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், இவர்களில் பதவி மூப்பு அடிப்படையில் ஓம் பிரகாஷ் ராவத்தை புதிய தலைமை தேர்தல் ஆணையராக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
இதையடுத்து ஓம் பிரகாஷ் ராவத், 22-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அடுத்தவாரம் பொறுப்பேற்கிறார்.