தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் சர்ச்சைக்குரிய உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜாதி ஆணவத்துக்கு கணவர் சங்கரை பலி கொடுத்தவர் கவுசல்யா. இதன் அடிப்படையில் கவுசல்யாவுக்கு மத்திய அரசு பணி கிடைத்தது.
ஊட்டி வெலிங்டன் கன்டோன்மெண்ட்டில் பணிபுரிந்து வந்த கவுசல்யா, ஜாதி ஆணவ கொலைகளுக்கு எதிரான பொது கூட்டங்களில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
கவுசல்யா மறுமணம் செய்த சக்தி மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேசிய இறையாண்மைக்கு எதிராக கவுசல்யா கருத்துகளை தெரிவித்திருந்தாராம்.
இதனால் கவுசல்யாவை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து கன்டோமெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.