ராகுலின் அதிரடி... ரஜினி கட்சிக்கு தாவுகிறாரா திருநாவுக்கரசர்? ஆதரவு மாவட்ட தலைவர்களுடன் அவசர ஆலோசனை

Thirunavukkasar upsets over Rahul decision

Feb 3, 2019, 00:05 AM IST

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக திருநாவுக்கரசர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திருநாவுக்கரசர் தமது ஆதரவு மாவட்ட தலைவர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

திமுகவுடன் மட்டுமே கூட்டணி என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருந்துவிட்டது. இதனால் தினகரனிடம் ‘அறுவடை’ செய்ய நினைத்த திருநாவுக்கரசர் நினைப்பில் மண் விழுந்தது.

திமுகவும் லோக்சபா தேர்தலின் போது திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கக் கூடாது என நிபந்தனை விதித்தது. இதனை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு கே.எஸ். அழகிரியை நியமனம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள திருநாவுக்கரசர், தம்மால் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

ரஜினி பக்கம் திருநாவுக்கரசர் தாவுவாரா? மீண்டும் தனிக்கட்சி தொடங்கி தினகரனுடன் கூட்டணி சேருவாரா? அல்லது பழைய பாசத்தில் பாஜகவில் ஐக்கியமாவாரா? என்பதுதான் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் நள்ளிரவை தாண்டியும் நடக்கும் ஹாட் டிபேட்.

- எழில் பிரதீபன்

You'r reading ராகுலின் அதிரடி... ரஜினி கட்சிக்கு தாவுகிறாரா திருநாவுக்கரசர்? ஆதரவு மாவட்ட தலைவர்களுடன் அவசர ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை