மக்களவைத் தேர்தல்:அதிமுக விருப்ப மனு செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு!

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் விருப்ப மனு வழங்குவது கடந்த 4-ந் தேதி ஆரம்பமானது. முதலமைச்சர் எடப்பாடி மகன் மிதுன் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், தற்போதைய அதிமுக எம்பிக்கள் உள்பட அதிமுகவினர் பலர் விருப்ப மனு கொடுத்தனர்.

இன்று மாலை வரை விருப்ப மனு கொடுக்க அவகாசம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News