விசாகனுடன் ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு மறுமணம்- முதல்வர் எடப்பாடி, மு.க. அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்பு!

நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கும் கோவை தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மு.க. அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

செளந்தர்யா- விசாகன் இருவரது திருமண நிச்சயதார்த்தம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு விதைப் பந்து வழங்கினார் ரஜினிகாந்த்.

நேற்று முன்தினம் ரஜினிகாந்த் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. திருமணத்துக்கான பல்வேறு சடங்குகள் நேற்றும் நடைபெற்றன.

இன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், மு.க. அழகிரி மற்றும் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Leave a reply