சிம்பு - இந்து மதம் ..., குறளரசன் - முஸ்லீம் ... , இலக்கியா - கிறிஸ்தவர்!! டி.ராஜேந்தர் குடும்பத்தில் சர்வமதமும் சம்மதம்!

t.rajendars son kuralarasan convert to Islam

by Nagaraj, Feb 16, 2019, 12:54 PM IST

டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். ஏற்கனவே மகள் இலக்கியா கிறிஸ்தவராக மாறிய நிலையில் டி.ஆரின் குடும்பத்தில் சர்வமதமும் சங்கமித்துள்ளது.

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கதாசிரியர், அரசியல்வாதி என டி. ராஜேந்தர் பன்முகம் கொண்டவர். டி.ராஜேந்தர் - உஷா தம்பதிக்கு சிலம்பரசன் (எ) சிம்பு, குறளரசன், இலக்கியா என்ற மூன்று பிள்ளைகள். சிவபக்தரான சிம்பு தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். மகள் இலக்கியா திருமணமாகி கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார்.

டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசன் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பாலிவுட்டில் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். குறளரசன் நேற்று திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் டி.ராஜேந்தர் - உஷா ஆகியோர் முன்னிலையில் இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்.

குறளரசன் மதம் மாறியது குறித்து டி.ராஜேந்தர், நான் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவன். அதனால் குறளரசன் மதம் மாற தடையேதும் விதிக்கவில்லை என்றார். ஆக டி.ஆரின் வீட்டில் சர்வம் சர்வமதம் என்றாகிவிட்டது.

 

 

You'r reading சிம்பு - இந்து மதம் ..., குறளரசன் - முஸ்லீம் ... , இலக்கியா - கிறிஸ்தவர்!! டி.ராஜேந்தர் குடும்பத்தில் சர்வமதமும் சம்மதம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை