சிம்பு - இந்து மதம் ..., குறளரசன் - முஸ்லீம் ... , இலக்கியா - கிறிஸ்தவர்!! டி.ராஜேந்தர் குடும்பத்தில் சர்வமதமும் சம்மதம்!

Advertisement

டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். ஏற்கனவே மகள் இலக்கியா கிறிஸ்தவராக மாறிய நிலையில் டி.ஆரின் குடும்பத்தில் சர்வமதமும் சங்கமித்துள்ளது.

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கதாசிரியர், அரசியல்வாதி என டி. ராஜேந்தர் பன்முகம் கொண்டவர். டி.ராஜேந்தர் - உஷா தம்பதிக்கு சிலம்பரசன் (எ) சிம்பு, குறளரசன், இலக்கியா என்ற மூன்று பிள்ளைகள். சிவபக்தரான சிம்பு தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். மகள் இலக்கியா திருமணமாகி கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார்.

டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசன் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பாலிவுட்டில் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். குறளரசன் நேற்று திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் டி.ராஜேந்தர் - உஷா ஆகியோர் முன்னிலையில் இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்.

குறளரசன் மதம் மாறியது குறித்து டி.ராஜேந்தர், நான் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவன். அதனால் குறளரசன் மதம் மாற தடையேதும் விதிக்கவில்லை என்றார். ஆக டி.ஆரின் வீட்டில் சர்வம் சர்வமதம் என்றாகிவிட்டது.

 

 

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>