பாஜக தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்தானதற்கு பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாததே காரணம் என்றும் கூறப்படும் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாமக தலைவர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே. மணி ஆகியோருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதன் பின் இன்று பிற்பகலில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் பாமக மற்றும் தேமுதிக தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இன்றைக்குள் பாமக, தேமுதிக கட்சிகளுடனான தொகுதி உடன்பாட்டை முடித்துவிட அதிமுக, பாஜக தரப்பில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அதன் பின் அமித் ஷா, நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.