அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக கலகக் குரல்! உடைகிரது பாமக? இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி ராஜினாமா!

PMK faces revolt agains alliance with AIADMK-BJP

by Mathivanan, Feb 20, 2019, 15:58 PM IST

அதிமுக- பாஜக அணியில் பாமக இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இக்கூட்டணிக்கு எதிராக பாமக மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழகங்கள் இல்லாத தமிழகம் என்பது பாஜகவின் முழக்கம். ஆனால் தற்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

அதேபோல் கார் மேகம் உள்ளவரை...திமுக- அதிமுகவுடன் கூட்டணியே கிடையாது; பாஜகவுடன் 200% கூட்டணியே இல்லை என பேசியது பாமக. தற்போது அதிமுக- பாஜக அணியில் பாமக இடம்பெற்றுள்ளது.

பாமகவின் இந்த முடிவு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இக்கூட்டணி முடிவுக்கு எதிராக பாமகவில் கலகக் குரல் வெடித்துள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றதற்கு எதிராக பாமகவின் மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

You'r reading அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக கலகக் குரல்! உடைகிரது பாமக? இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி ராஜினாமா! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை