தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- அரசியலே பேசவில்லையாம்!

MK Stalin to meet Vijayakanth

by Mathivanan, Feb 22, 2019, 13:29 PM IST

லோக்சபா தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் புதிய திருப்பமாக தேமுதிக பொதுச்செயர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

அதிமுக- பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்களைக் கேட்டு அடம்பிடிக்கிறது தேமுதிக. இன்னொரு பக்கம் தினகரனுடன் கூட்டணி சேர வேண்டும் என விஜயகாந்தை திருநாவுக்கரசர் வலியுறுத்துகிறார்.

இதனிடையே இன்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், விஜயகாந்த் எனது நீண்டகால நண்பர். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். இந்த சந்திப்பின் அரசியல் எதுவும் பேசவில்லை என்றார்.

 

You'r reading தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- அரசியலே பேசவில்லையாம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை