பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் - தினகரன் கட்சியில் ஐக்கியம்!
actor Ranjith joins dinakarans ammk
பாமக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், தினகரன் முன்னிலையில் அம முகவில் இணைந்தார்.
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஞ்சித் நேற்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அதிமுக அமைச்சர்களை ஊழல்வாதிகள் என்று விமர்சித்து விட்டு கூட்டணி வைத்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பாமக மீது ரஞ்சித் முன்வைத்து விலகினார்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று தினகரனைச் சந்தித்த நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தார்.
You'r reading பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் - தினகரன் கட்சியில் ஐக்கியம்! Originally posted on The Subeditor Tamil
More Politics News
READ MORE ABOUT :