பாமக கூட்டணியை உறுதி செய்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் கே.பி.முனுசாமிக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது என அதிமுக வட்டாரத்தில் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.
திமுகவா...அதிமுகவா என பாமக குழம்பிக் கொண்டிருந்தபோது, எடப்பாடி பக்கம் வாருங்கள் என தைலாபுர தோட்டத்துக்கே போய் பேச்சுவார்த்தை நடத்தினார் கே.பி.முனுசாமி. தர்மயுத்தம் நடத்திய காலத்தில் பன்னீர்செல்வம் பக்கம் இருந்த முனுசாமி, இப்போது எடப்பாடியின் வலதுகரமாகவே மாறிவிட்டார். இதற்குப் பிரதிபலனாக 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கும்போது, சோளிங்கர் தொகுதியை கே.பி.முனுசாமிக்குக் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்
முதல் அமைச்சர். சோளிங்கர் தொகுதியின் வன்னியர்களின் வாக்கு அபரிமிதமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு 50,000 வாக்குகளை பாமக வாங்கியது. இந்தமுறை அதிமுகவோடு இணைந்து போட்டியிடுவதால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார் முனுசாமி. அப்படி வெற்றி பெற்று வந்தால் கேபினட்டில் இடம் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் முதல் அமைச்சர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் நம்பிக்கைக்குரியவராக முனுசாமியை வளர வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்து கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் கே.சி.வீரமணியும்.
-அருள் திலீபன்