விஷால் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டார்களா? - விசாரணைக்கு உத்தரவு

Jan 24, 2018, 09:44 AM IST

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனுவில் நடிகர் விஷாலின் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படும் மனு குறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விஷால், தன்னை முன் மொழிந்தவர்கள் மிரட்டப் பட்டனர் என்று குற்றம் சாட்டினார். மேலும், அது தொடர்பான ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த ஆடியோ-வின் உண்மை தன்மை குறித்தும், முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்களாக என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Leave a reply