மோடியை சிறைக்கு அனுப்புவேன் என பேசுவதா? ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை சிறைக்கு அனுப்புவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் நேற்று பிரசார கூட்டத்தில் பேசிய் ராகுல் காந்தி, திருவள்ளுவர் கூறியதைப் போல உண்மை வெல்லும்.. உண்மை வெல்லும் போது மோடி சிறையில் இருப்பார் என ஆவேசமாக பேசினார்.

ராகுலின் இப்பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், மோடியை சிறைச்சாலைக்கு அனுப்புவோம் என ஏளனம் பேசும் ராகுல் ஆணவத்தைக் கண்டிக்கிறோம்.

பெயில் குடும்ப வாரிசு உளறல்! ஊழல் காங். தேர்தலுக்குப் பின் காணாமல் போகும் காலம் விரைவில் வரும். போபர்ஸ் ஊழல் வாரிசுகளே உங்களை வரலாறு மறக்காது; மன்னிக்காது என சாடியுள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்