கோவை: கோவை நகரில் நாளை முதன்முறையாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைக்கிறார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு பொங்கலுக்கு எந்த தடையுமின்றி மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், கோவை நகரில் நாளை முதன்முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இதனை, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் 750 காளைகளுடன் சுமார் 500 வீரர்கள் மோதுகின்றனர்.
கோவை மாநகராட்சி மற்றும் ஓம்கர் பவுண்டேஷன் சார்பில் சுமார் 25 ஏக்கர் கொண்ட திடலில் ஜல்லிக்கப்டு போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் பார்வையிட்டார். கோவை நகரில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் இதை காண மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.