ஆமை புகுந்த வீடு -வைகோவை கடுமையாக விமர்சித்த அழகிரி மகன்

Advertisement

வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார் அழகிரியின் மகன் துரைதயாநிதி.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் தொகுதிகள் என முடிவு செய்ததுடன் தனது கட்சி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது தி.மு.க. அதன்படி கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பிரச்சாரத்தை துவங்கிவிட்டனர். திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சி வைகோவின் மதிமுக. கடந்த காலகட்டங்களில் திமுகவை வைகோவும், மதிமுகவை திமுக பிரமுகர்களும் கடுமையாக திட்டிக்கொண்டிருந்தனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்த கருணாநிதியை பார்க்க சென்ற வைகோவை திமுகவினர் தாக்கிய காட்சிகளும் அரங்கேறின.

இப்படி இருந்த இரு கட்சிகளின் பகை அனைத்தும் மறக்கப்பட்டு ஒன்றாகியுள்ளன. ஸ்டாலினை முதல்வராக்குவது தான் என் முதல் வேலை எனக் கூறி வைகோ தேர்தல் களத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இந்தக் கூட்டணி குறித்து மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக வைகோவை குறியீடு போட்டு கிண்டல் செய்திருக்கிறார் துரைதயாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தமிழகத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த இந்த அரசியல்வாதி கோபால்சாமி, தேர்தலுக்குப் பின் மதிமுகவை திமுகவுடன் இணைத்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை எனப் பதிவிட்டுள்ளதுடன் ``ஆமை புகுந்த வீடு'' என்பதை குறிப்பிடும் வகையில் குறியீடுகளை வெளியிட்டுள்ளார். இது தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>