`ராமதாஸும், அன்புமணியும் காமெடியன்கள்' - உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மகன் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், "மோடி நம் நாட்டின் பிரதமர் இல்லை. அவர், அவ்வபோது வந்துசெல்லும் என்.ஆர்.ஐ பிரதமர். மோடி ஒரு கேடி. இந்தத் தேர்தலில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். வில்லன், மோடிதான். அவரின் அடியாட்கள் எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும். காமெடியன்கள் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவே மர்மமாக இறந்துள்ளார். சாமானியனுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள். தலைவர் ஸ்டாலினின் வழிகாட்டி துரைமுருகன். அவரின் மகன் கதிர் ஆனந்துக்கு ஓட்டுப்போடுங்கள்" என்றார்.

 

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்