முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியின் பிரதான பிரச்சாரகராக மாறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 22-ந் தேதி சேலம் மாவட்டம் கருமாந் துறையிலிருந்து தீவிர தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்.கடந்த 4 நாட்களில் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வேனில் சுற்றுப்பயணம் செய்து சென்னையிலும் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
இன்று காலை 8 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கி மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்றைய பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.