நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் மெட்ராஸ் யுனிவர்சிட்டி -உயர்கிறது கல்விக்கட்டணம்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையைப் போக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

162 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்தின் 2019 – 2020 கல்வியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை அண்மையில் வெளியானது. சென்னை பல்கலைக்கழகம், 85 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் இருப்பதாக மதீப்பிடபட்டு அறிக்கை வெளியாகி இருக்கிறது.

நிதி நெருக்கடியைச்  சமாளிக்க, மாணவர்களின் கல்விக் கட்டணங்களை உயர்த்த சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 7-வது ஊதிய ஆணையத்தை அமல்படுத்தியதே இந்த நிதி நெருக்கடிக்கான காரணம் எனக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாகக் கல்வியாளர் ரமேஷ் பிரபாவிடம் பேசினோம், ‘கலை அறிவியல் துறை சார்ந்த படிப்புகளை  நடுத்தர வர்க்க மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். அதிக செலவழித்து புரொபஷனல் படிப்புகளை அவர்கள்  தேர்வு செய்வதில்லை. சிறப்பு மிக்க சென்னை பலகையில் நகர்ப்புறம் மட்டுமல்லாமல், கிராமப்புற மாணவர்கள் படிக்கிறார்கள். இப்படியான, நிலையில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு சரியானதாக இல்லை. பல்கலையின் நிர்வாகத் திறன் இன்மையால் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்காக, மாணவர்கள் மீது சுமையைக் கூட்டுவது சரியில்லை’ என்றார்.

சென்னை பல்கலைக்கழகம் யு.ஜி.சி.-யின் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாததே நிதி நெருக்கடிக்குக் காரணம் எனவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.   

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!