சந்திர கிரகணம் எதிரொலி பிர்லா கோளரங்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

by Isaivaani, Feb 1, 2018, 08:09 AM IST

சென்னை: 150 ஆண்டுகளுக்கு பின் நேற்று நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணத்தை காண சென்னையில் உள்ள பிர்கால கோளரங்கத்தில் மக்கள் கூட்டம் திரளாக குவிந்தனர்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் மூன், ப்ளூ மூன், புளட் மூன் ஆகிய அரிய நிகழ்வுகளுடன் நேற்று மாலை சந்திர கிரகணம் தோன்றியது. இதுபோன்ற சந்திர கிரகணம் மீண்டும் 2028ம் ஆண்டில் தான் நிகழும் எனவும் கூறப்படுகிறது.

இதனால், சந்திர கிரணத்தை காண மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தின் பல இடங்களில் சமவெளிப் பகுதியிலும், சிலர் தங்களின் வீட்டு மாடிகளில் இருந்தும் சந்திர கிரகணத்தை கண்டனர். மேலும், பலர் இதற்காகவே மெரினா கடற்கரைக்கு திரண்டனர்.

இதேபோல், சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும் சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். இங்குள்ள, கோளரங்கத்தில் தொலை நோக்கி மூலம் மக்கள் வரிசையில் நின்று சந்திர கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.

You'r reading சந்திர கிரகணம் எதிரொலி பிர்லா கோளரங்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை