அமமுக நகர செயலாளர் சுந்தரவேல் கார் விபத்தில் உயிரிழப்பு

டிடிவி தினகரனின் அமமுக நகர செயலாளரும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.,வும் ஆன சுந்தரவேல் இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் வழியில் வேகமாக சென்ற சுந்தரவேலின் கார் முன்னாள் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோடியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுந்தரவேல் அவரது மனைவி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் அவர்களது உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளது.

உயிரிழந்த சுந்தரவேல் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர் டிடிவி தினகரன் தொடங்கிய அமமுகவில் இணைந்த அவர், திருப்பத்தூர் அமமுக நகர செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்த சுந்தரவேல் விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்த டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!