மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பா. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். மானாமதுரையில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அவரை ஆரத்தி எடுத்த 25 பெண்களுக்கு தலா 500 ரூபாய் தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக பெண்கள் குற்றச்சாட்டு.
தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வது மிகப்பெரிய குற்றம். ஆனால், சிவகந்தை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம், தேர்தல் பிரசாரத்திற்கு வருவதை ஒட்டி, அவரது கட்சிக்காரர்கள், ஆரத்தி எடுக்க 25 பெண்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் பேரில், அந்த பெண்களும், ஆரத்தி எடுத்தனர். ஆனால், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு மொத்தமாக வெறும் 800 ரூபாய் மட்டுமே கொடுத்து விட்டு கிளம்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள், 25 பேருக்கு வெறும் 800 ரூபாய் எப்படி போதும். 500 ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு உங்களால் அதையே கொடுக்க முடியவில்லையே, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மாசம் மாசம் எப்படி 6000 ரூபாய் கொடுப்பீங்க என தேர்தல் வாக்குறுதியாய் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த வாக்குறுதியையும் சேர்த்து கலாய்த்து கேள்வியாய் கேட்டுள்ளனர்.
இதனால், சிவகங்கை தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் மற்றும் ஜனங்களிடம் சர்ச்சை பேச்சுக்களால் பெரிய அபிமானம் இல்லாத எச்.ராஜா ஆகிய இருவரும் சிவகங்கையில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.