மோடி ரொம்ப நல்லவர். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளது. தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் உடல் நல நல குறைவு காரணமாக தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். மருத்துவர்கள் அவரை தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள கூடாது கண்டிப்பாக கூறியதே இதற்கு காரணம் தெரிகிறது. இருப்பினும் அவருக்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சுதிஷ் தங்களது மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகின்றனர். மேலும் கேப்டன் மகன் விஜயபிரபாகரனும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது விஜயகாந்த் விருகம்பாக்கம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் அவருக்கு வீட்டிலேயே பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜயகாந்த் நீண்ட நாளைக்கு பிறகு தனது கட்சி டி.வி.க்கு விஜயகாந்த் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: எனது உடல் நலம் நன்றாக உள்ளது.வெகுவிரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவேன். வந்து பேசுவேன். மருத்துவர்களின் அறிவுரைப்படிதான் பிரசாரத்துக்கு வரமுடியும்.
அ.தி.மு.க. கூட்டணிதான் ஜெயிக்கும். தி.மு.க. கூட்டணி தோற்கும். மோடி நல்லவர். மீண்டும் அவர் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு தே.மு.தி.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் நாம் ஜெயிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக 4 எழுத்து ... தேமுதிக 4 எழுத்து... கிடைத்ததும் 4 தொகுதிகள் -பிரேமலதா வர்ணனை