நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக எங்களது கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாக அச்சிட்டுள்ளார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார் சீமான்.
நாளை மறு நாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது,
“நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு வளர்ந்து விடக் கூடாது என்பதற்காக கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாக அச்சிட்டுள்ளார்கள். இது பற்றி புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் உரிய முறையில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. என்றார். கரும்பு விவசாயி சின்னத்தை இருட்டடிப்பு செய்யவே இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சீமான்.
“திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மட்டும்தான் பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? அதிமுக வேட்பாளர்கள், பிரமுகர்கள் வீடுகளில் பணம் இல்லையா அங்கெல்லாம் ஏன் தேர்தல் கமிஷன் செல்லவில்லை? காசு கொடுக்கும் வேட்பாளரையும், கட்சியையும் தேர்தலில் 10 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கும் படி சட்டமியற்ற வேண்டும். ஆனால், இதை எல்லாம் செய்ய முடியாத தேர்தல் பறக்கும் படையினர். விவசாயிகள் கொண்டு செல்லும் பணத்தையும், மருத்துவ செலவுக்கு கொண்டு செல்லும் பணத்தை பறித்து வருகிறார்கள். தேர்தல் கமிஷனின் அடிப்படையே தவறாக இருக்கிறது.சோதனை என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் முதல்வரே வெளிப்படையாக பணம் கொடுக்கிறார். தேர்தல் ஜனநாயகம் கேலிக்கூத்தாக உள்ளது. ”என்று குற்றம் சுமத்தினார்.