நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தாக்கிய ராணுவ வீரர்

கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற 38 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முகவர்கள் பணியாற்றி வருகின்றனர். கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் முகவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
வாக்குச்சாவடியில் உள்ள முகவர்களுக்கு உணவு எடுத்து செல்லும் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிளுக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த ராணுவ வீரர் ரியாஸ் என்பவரை தாக்கினார். இதில் ரியாஸ் காயம் அடைந்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய போவதாக வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் தகவல் தெரிவித்தார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்