கிருஷ்ணர் விவகாரத்தில், திராவிட கழக தலைவர் வீரமணியை கைது செய்ய உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம்

hc refuses to direct arrest of dk leader

by Subramanian, Apr 24, 2019, 08:07 AM IST

கிருஷ்ண பகவானை அவதூறாக பேசிய தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.

பகுத்தறிவு என்ற பெயரில் இந்து தெய்வங்களையும், இந்து மத சடங்குகளை மட்டும் திராவிட கழகத்தினர் தூற்றுவது வழக்கம். மற்ற மதத்தை பற்றி பகுத்தறிவுவாதிகள் வாயை திறப்பது கடினம்.

அண்மையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துடன் கிருஷ்ண பகவானை ஒப்பிட்டு பேசினார். இது கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கி.வீரமணியை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அசோக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தி பேசிய வழக்கில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கி.வீரமணியின் பேச்சு அடங்கிய வீடியோ யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது வீரமணியை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த நீதிபதி, கைது செய்து விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் 3 நீதிபதிகள் குழு விசாரிக்கிறது! 69 வருட வரலாற்றில் முதல் முறை!!

You'r reading கிருஷ்ணர் விவகாரத்தில், திராவிட கழக தலைவர் வீரமணியை கைது செய்ய உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை