10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! –மாணவிகளே டாப்

10th board exam result published

by Suganya P, Apr 29, 2019, 00:00 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இம்முறையும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளியான தேர்வு முடிவில் மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளைக் காட்டிலும் மாணவர்கள் 3.7 சதவீதம் குறைவாகத் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 93.3 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களில் தங்கள் மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த அலைப்பேசி எண் மூலம் தேர்வு முடிவுகளைக் குறுஞ்செய்தியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

மே.வங்கத்தில் வாக்குப்பதிவில் வன்முறை - போலீசாருடன் திரிணாமுல் கட்சியினர் அடிதடி

You'r reading 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! –மாணவிகளே டாப் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை