திருமுருகன் காந்தியை நாசாவின் தலைவராக்க ஐநா சபை ஆதரவா? - உண்மை என்ன?

என்னைப் பற்றி மேலும் ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் இச்செய்தி பொய்யானது என்று எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள் என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

Feb 6, 2018, 16:22 PM IST

என்னைப் பற்றி மேலும் ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் இச்செய்தி பொய்யானது என்று எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள் என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெகுவாக பரவி வருகிறது. அதில், “திருமுருகன் காந்தியின் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார அறிவைக்கண்டு வியந்த உலக வர்த்தக நிறுவனமும், நாசாவும் இவரை தலைவராக நியமிக்க நீயா, நானா என போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது.

ஐநா சபை திருமுருகன் காந்தியை தலைவராக்க நாசாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைதான காரணத்தால். ட்ரம்ப் எதிர்க்கிறார். ஃபேஸ்புக் நிறுவனம் 1 ஷேர் செய்வதன் மூலம் ஒரு ஓட்டு என கணக்கிட்டு இவரை நாசாவின் தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளது. எனவே விரைவாக பகிரவும்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில், “முன்னர், என் பெயரை ’டேனியல்’ என்று மாற்றினார்கள். அப்படியாக அவர்கள் அறிவிக்கு முன்னர் விக்கிபீடியாவில் என் பெயரை ‘டேனியல்’ என்று மாற்றினார்கள். பின்னர் எச்.ராஜா அறிவிக்க உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார்கள்.

இவர்கள் தான் காந்தியடிகளை கொலை செய்யுமுன்னர் ‘கோட்சே’வின் பெயரை ‘இஸ்மாயில்’ என்று பச்சைக்குத்திக் கொள்ளச் செய்தார்கள். காந்தியை கொலை செய்தவர்கள் இசுலாமியர்கள் என்றூ செய்தி பரவி இசுலாமியருக்கு எதிராக கலவரம் வெடிக்குமென சூழ்ச்சி செய்தவர்கள் தான் இந்தக் கூட்டம்.

தற்போது என்னைப் பற்றி மேலும் ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் இச்செய்தி பொய்யானது என்று எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள். இக்கும்பலின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பு.

அறிவியல் - தொலை தொடர்பு வளர்ந்த இக்காலத்திலேயே இத்தனை பொய்களை பரப்பும் இந்தக் கூட்டம் 2000 வருடங்களுக்கு முன் சமஸ்கிருதம் தான் புனித மொழி என்று பிரச்சாரம் செய்தது. தமிழர்கள் ‘இந்து என்று 100 வருடங்களுக்கு முன் பிரச்சாரம் செய்து ஏமாற்றியது. நாமெல்லாம் இந்தியர் என்று தற்போது ஏமாற்றி நம் சொத்துக்களை பறித்துக் கொள்கிறது. பொய் சொல்வதில் வல்லவர்கள் இந்த சூழ்ச்சிக்காரர்கள்.

இந்த பொய் செய்தி பரவுவதை தடுத்திட உதவுங்கள்.. இச்செய்தியை பரப்பிய பக்கத்தினை பற்றிய புகார் அளித்து மூடவைப்பதே, இது போன்ற விபரீதங்களை தடுத்திட உதவும்” என்று கூறியுள்ளார்.

You'r reading திருமுருகன் காந்தியை நாசாவின் தலைவராக்க ஐநா சபை ஆதரவா? - உண்மை என்ன? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை