முடிவுக்கு வந்த மூன்று நாள் போராட்டம் - பணிக்கு திரும்பும் சென்னை மெட்ரோ ஊழியர்கள்

chennai metro staffs protest withdrawn

by Sasitharan, May 1, 2019, 22:07 PM IST

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திறக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ஊழியர்கள் சங்கம் ஆரம்பித்ததாக கூறப்பட்டது. ஆனால் நிரந்தர ஊழியர்கள் இருக்கும் போது தற்காலிக ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு நிறைய சம்பளம் தருகிறார்கள். எங்களுக்கு சம்பளம் உயர்த்தி தர மறுக்கிறார்கள் என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கேட்டதற்காக மெட்ரோ ரயில் ஊழியர் ஒருவரை இணை பொது மேலாளர் சதீஷ் பிரபு தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சதீஷ் பிரபுவை கைது செய்ய வேண்டும் என நேற்று முன்தினம் மாலை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் மெட்ரோ ரயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் மீண்டும் போராட்டம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இன்று மே தின விடுமுறை என்பதால் மெட்ரோ சேவை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊழியர்களுடன் தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாளையில் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள் எனக் கூறப்படுகிறது.

You'r reading முடிவுக்கு வந்த மூன்று நாள் போராட்டம் - பணிக்கு திரும்பும் சென்னை மெட்ரோ ஊழியர்கள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை