‘ஓ.பி.எஸ். கல்வெட்டை உடனடியாக அகற்றுங்கள்’ தங்கத்தமிழ்ச்செல்வன் விளாசல்!!

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் பணம் எடுக்கப்பட்டதால் அங்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க. சார்பில் தங்கத் தமிழ்செல்வன், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டனர்.

மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18ல் இடைத்தேர்தல் முடிந்து விட்டது. மீதமுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, மே 23-ம் தேதிதான் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டு, அதன்பின் அவர் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற பின்புதான் அவர் எம்.பி.யாவார். ஆனால், தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் இப்போதே எம்.பி. ஆகி விட்டார். அது மட்டுமல்ல. அதற்குள் கல்வெட்டிலேயே அவர் எம்.பி. என்று பொறிக்கப்பட்டுள்ளது.


தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரன் கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி புரிந்ததாக ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில்தான், ரவீந்திரநாத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினராக போட்டுள்ளனர்.
இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ள தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், அந்த கல்வெட்டை உடனடியாக அகற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியினரும் அந்த கல்வெட்டை உடனடியாக அகற்ற வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த கல்வெட்டில் ரவீந்திரநாத் பெயரை மட்டும் அவசர, அ்வசரமாக மறைத்துள்ளனர்.

விழிப்புணர்வு பிளஸ் விஸ்வாசம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்த சிவகார்த்திகேயன்!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்