மேட்ரிமோனியல் நிறுவனங்களை கண்காணிக்க வழிகாட்டுதல் அமைக்கக்கோரிய மனு மீது ஜூலை 9-ல் விசாரணை

Matrimonial sites info supervising case

Jun 17, 2019, 18:29 PM IST

திருச்சி பெற்றோர் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஜெயந்திராணி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் மணமகன், மணமகள் தேடலுக்கான தனியார் திருமண தகவல் மையங்கள், (மேட்ரிமோனியல்) அதன் இணையதளங்களில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த இணையதளத்தில் கணவரை இழந்த நிலையில், பெண் குழந்தையுடன் வாழும் பெண் மருத்துவர் ஒருவர், மறுமணம் செய்ய முடிவு செய்து தனது விபரங்களை மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

இவரது விபரங்களை தெரிந்த அஜய் என்பவர், தான் அமெரிக்காவில் மருத்துவராக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அறிமுகமாகியுள்ளா். பின்னர் அப்பெண்ணுடன் பாலியல் ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ளார். அவசர தேவை என்றும், ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுவதாகவும் 2 தவணைகளில் 18 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் அப்பெண்ணுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது தொடர்பான விசாரணையில் அஜய் பல்வேறு பெயர்களில் மேட்ரிமோனியல் இணையதளங்களில் போலியான தகவல்களை பதிவு செய்து பல பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகளை பறித்து ஏமாற்றியது தெரியவந்தது.

File

இதனால் இது போன்ற மோசடிகளைத் தவிர்க்கும் வகையில், தனியார் திருமண தகவல் மைய ( மேட்ரிமோனியல்) இணைய தளங்களில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தவும், மேட்ரிமோனியல் இணையதளங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில்," திருமண மோசடி தொடர்பாக அஜய் மற்றும் அவரது ஓட்டுனர் முருகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு,

' தனியார் திருமண இணைய தளங்களையும் அதன் நிறுவனர்களையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 9ஆம் தேதி ஒத்திவைத்தனர். 

- தமிழ் 

ஒரே வீட்டில் இரு அந்நியர்: மன விலக்கத்தில் தம்பதியர்

You'r reading மேட்ரிமோனியல் நிறுவனங்களை கண்காணிக்க வழிகாட்டுதல் அமைக்கக்கோரிய மனு மீது ஜூலை 9-ல் விசாரணை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை