சபாஷ்..! ஊழல் பட்டியலில் தென்னக ரயில்வேக்கு 2வது இடம்

Feb 13, 2018, 09:25 AM IST

சென்னை: லஞ்சம் மற்றும் ஊழல் விவகாரங்களில் தென்னக ரயில்வே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தலைமை இடமாக கொண்டு தெற்கு ரயில்வே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

இதில், கடந்த 2002ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் 18,644 ரயில்வே ஊழியர்கள் லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, ரயில்வே ஊழியர்களில் டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கொடுப்பவர்கள், சரக்கு பெட்டகம் முன் பதிவு செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு ஊழியர்களும் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், வடக்கு மண்டல ரயில்வே லஞ்சம் வாங்குவதில் முதல் இடத்தையும், தொடர்ந்து, தென்னக ரயில்வேக்கு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதேபோல், வடக்கிழக்கு மண்டலத்தில் 1,402 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் 1254 பேர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவாகி உள்ளன. ரயில்வே ஊழியர்கள் சட்டம் 1968ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.

இதில் குறிப்பாக, வடக்கு ரயில்வே மட்டும், கடந்த 2 ஆண்டுகளில் 6,121 பேர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளதாகவும், தென்னக ரயில்வேயில் 1955 பேர் ஊழல் வழக்கில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சபாஷ்..! ஊழல் பட்டியலில் தென்னக ரயில்வேக்கு 2வது இடம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை