ரஜினிகாந்த் முன்னெடுத்துள்ள ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டது பாஜக தான் என்று பாஜக தமிழிசை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி மிகப்பெரிய அளவில் தீ விபத்து நடந்துள்ளது. இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இந்து கோவில்களில் தீ விபத்து சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.
ஆன்மிக அரசியலை முன்னெடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். ஆனால் ஆன்மிக அரசியலுக்கு முதல் முதலில் வித்திட்டது பாஜக தான்.
தமிழகத்திலும் பாஜக ஆன்மிக அரசியலை நடத்தி வருகிறது. காவி அரசியலும், ஆன்மிக அரசியலும் ஒன்றுதான். தேசிய கொடியில் காவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தமிழகத்திலும் காவி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண். அண்ணா வளர்த்த தமிழல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ்” என்று தெரிவித்துள்ளார்.














